Close
நவம்பர் 22, 2024 12:29 மணி

திமுக அரசைக்கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

ஈரோட்டில் மாநகர் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக  இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்  வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார்.  முன்னாள் எம்எல்ஏ -க்கள் பிசி..இராமசாமி, சிவசுப்பிரமணி, கிட்டுசாமி, பூந்துறை பாலு, கே.எஸ்.தென்னரசு  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி .பழனிச்சாமி ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால்.

கவுன்சிலர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கவேலு தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜன், ராமசாமி, மாணவரணி மாவட்ட தலைவர் ரத்தன் பிரித்வி, பெரியார் நகர் பகுதி அமைத்தலைவர் மீன் ராஜா, 46 புதூர் தலைவர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, பெரியார் நகர் பகுதி நிர்வாகி சூரியசேகர் உள்பட பலர் நூற்றுக்காணக்கானோர் கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top