சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 விளையாட்டு போட்டி வருகின்ற 28.7.2022 அன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவிகளுக் கும் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செஸ் போட்டிகளை, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா, மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.சு. கவிதைப்பித்தன் ஆகியோர் 25 /7/ 2022 தொடங்கி வைத்தனர்.
நிகழ்வில் சுப சரவணன், அசோக் பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர்பெ ராஜேஸ்வரி, நகரச் செயலாளர் ஆ செந்தில், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன், புதுக்கோட்டை சேர்மன் சின்னையா, கரம்பக்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துகிருஷ்ணன், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர்அரு. வடிவேலு.
கீரை தமிழ்ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் சு. சண்முகம், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனைக் குழு வாரிய உறுப்பினர் ஏ.கே. செல்வம், நெசவாளர் அணி அமைப்பாளர் எம் .எம். பாலு.
புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் வட்டச் செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.