Close
செப்டம்பர் 20, 2024 5:55 காலை

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கணித பயற்சி முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தாம்பூர் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கணித பயிற்சி முகாம்

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கணித பயற்சி முகாம் நடந்தது.
புதுதில்லி இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கணித சொற்பொழிவு மற்றும் பயற்சி முகாம் போஸ் அறிவியல் கழக அமைப்புடன் இணைந்து புத்தாம்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.பிரவீன்குமார் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். மன்னர் கல்லூரி முன்னாள் வரலாற்று துறை பேராசிரியர் சா. விஸ்வநாதன், எஸ் .ஆர். அரங்கநாதன் நூலக நிர்வாகி ஜி.சாமிநாதன் , போஸ் அறிவியல் கழக தலைவர் மற்றும் நமது அறிவியல் மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த பயிற்சி முகாமில் சென்னை, துவாரகா தாஸ், கோவர்த்தன் தாஸ், வைஷ்ணவா கல்லூரி கணிதத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா.சிவராமன் (இந்திய தேசிய அறிவியல் கழக விருது பெற்றவர்) மற்றும் கணித ஆராய்ச்சி மாணவி செங்கோதை ஆகியோர் கணித சிறப்பு பயிற்சியை வழங்கினார்கள்.
இதில் கணித எளிய சூத்திரங்கள், வழிமுறைகள் , கணித தேர்வை எதிர்கொள்ளும் திறன் , கணிதத்தின் பயன்கள், கணித ஆய்வின் முக்கியத்துவம் , கணித அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு, கணித பயம் போக்கும் விழிப்புணர்வு தகவல்கள், கணிதத்தை எளிதாக கற்றுக்கொள்ளும் வழி முறைகள் ஆகியவை பயிற்சியளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் நமது அறிவியல் இதழ்அன்பளிப்பாக வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பி.சந்திரசேகரன்  வரவேற்றார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக நிர்வாக உதவியாளர் சா.நிர்மல் சரவணன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களும் கணித ஆசிரியர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.   ஏற்பாடுகளை புதுகை போஸ் அறிவியல் கழகம் செய்திருந்தது.

Attachments area

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top