Close
செப்டம்பர் 20, 2024 6:33 காலை

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்களின் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக உடனடி பேச்சுவார்த்தை துவங்க வேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில் தர்ணா போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு அரசை வலியுறுத்தி மாநிலந்தழுவிய தர்ணா போராட்டம் தஞ்சையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு ஆதரவாகவும், விவசாயிக ளுக்கு உறுதுணையாகவும் கிராம கூட்டுறவு வங்கிகள், ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் என 5000 -க்கு மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு, சேவையாற்றி வருகின்றன.

இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுக ளுக்கு மேலாக ஊதிய ஒப்பந்தம் என்பது இது நாள்வரை பேசப்படவில்லை. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சொற்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காணவும் , கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தின் தலையீடுகள் அதிகமாகி, அவர்களுடைய பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக தொந்தரவுகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன.

பதிவாளர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வலியுறுத்தியும் தமிழ்நாடு தழுவிய தர்ணா போராட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட வங்கி சங்க ஊழியர் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

 ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் சி.சந்திரகுமார்  தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன செயலர் ஆர்.கோவிந்தன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சுரேஷ், பொருளாளர் டி.ராமச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் சி.சிவமணி.

தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க செயலாளர் கே, கந்தவேல், ஓய்வு பெற்ற நகர வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் என். எஸ் .பாண்டியன், தஞ்சை மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்க பொருளாளர் ஏ.நெப்போலியன், தஞ்சை மாவட்ட தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் டி. ஆர். மனோகரன்.

தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் ஆர். வீரசேகர் , தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பொதுச்செயலாளர் எஸ்.குமார் , ஓய்வு பெற்ற அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் என்.பாலசுப்பிர மணியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மாநில துணை தலைவர் துரை. மதிவாணன்.

இன்சூரன்ஸ் பணியாளர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் ஆர்.புண்ணியமூர்த்தி,தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டம் மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்க செயலாளர் டி.சீனிவாசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம்  ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.

கோரிக்கைகள்: கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பேசப்படா மல் கிடப்பில் உள்ளது, உடனடியாக பேசி முடித்து தீர்வு காண வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதி யம் பத்தாயிரம் வழங்கிட வேண்டும்.

ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து சம்பளம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், மாநில ஆள்சேர்ப்பு மையத்தின் மூலம் பணியில் சேர்ந்தவர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் தற்போது உள்ள பணிநிலை திறன் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

நிரந்தர துணை ஊழியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட கூற்ற வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அதே போல வங்கிகளின் நலன் பாதுகாக்கப்பட கூட்டுறவு வங்கிகளில் தேவையான அமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

ஒன்றிய அரசு விவசாய கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கி வந்த இரண்டு சதவீத வட்டி உதவித்தொகையை தொடர்ந்து வழங்கிட வேண்டும், தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைகள் கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும்.

நகர வங்கிகள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை மற்றும் வளர்ச்சி வங்கிகள் அவற்றின் பணிகள் முழுவதுமாக கணணி மயமாக்கப்பட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஊதிய உயர்வு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டால் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மாநிலந்தழழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top