Close
நவம்பர் 22, 2024 2:32 மணி

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் பங்கேற்ற பெண்கள்

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதுக்கோட்டை மிட்டவுன் மற்றும்மகாராணி ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய உலகத்தாய்பால் விழிப்புணர்வு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நமது மத்திய மற்றும் மாநில அரசுகள், உலக சுகாதார மையம் மற்றும் யுனிசெப் போன்ற உலக நிறுவனங்கள் தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றியும் மக்களின் அறியாமையைப் போக்கி சமுதாயத்தில் விழிப்புணர்வை உண்டாக்கும் பொருட்டு வருடந்தோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தை உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் மகாராணி ரோட்டரி சங்கம் இணைந்து உலகத்தாய்ப் பால் விழிப்புணர்வு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது.
விழாவில் ​டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கே.எச்.சலீம்  கலந்து கொண்டு  வரவேற்றார்.

புதுக்கோட்டை ரோட்டரி மாவட்டம் 3000-த்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் வி.ஆர். வெங்கடாஜலம், சிவாஜி மற்றும் துணை ஆளுநர் சினேகா ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் என்.கே. சரவணன் மற்றும் மகாராணி ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் லெட்சுமி அண்ணாமலை  ஆகியோர் தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்தனர்.

மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் திரு.ரமேஷ் அவர்கள் திட்ட விளக்கவுரையாற்றினார். டீம் மருத்துவனை யின் மகப்பேறு மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர் அனிதாதனசேகரன் மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் மகேஷ்வரி இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தாய்ப்பால் புகட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும் தாய்மார்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
விழாவில் பங்கேற்ற தாய்மார்களுக்கு வினா-விடை போட்டி நடைப்பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.  அனைவருக்கும் மகாராணி ரோட்டரி சங்கத்தின் செயலாளர் கலா கிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை பொது மேலாளர்ஜோசப் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்   யோகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top