தாளவாடி அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் அவதிப்பட்டனர்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்ததால் பள்ளி மாணவ மாணவிகள் அமர முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பள்ளி முழுவதும் சேதமடைந்த நிலையில் முறையாக பராமரிக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தாளவாடி மலைப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு தாளவாடி பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் தாளவாடி பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்கூரையில் கசிவு ஏற்பட்டு வகுப்பறைக்குள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக பள்ளி வகுப்பறையில்
அமர முடியாமல் மாணவ மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
மேலும் இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள இரண்டு கட்டிடங்கள் முழுவதுமாக சேதம் அடைந்து காணப்படுவதால் அங்கும் வகுப்புகள் நடத்த முடியவில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போதிய கழிப்பறை வசதி, நீர் வசதி இல்லை என மாணவ,மாணவியர்கள், பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்ற னர். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை முறையாக பராமரித்து தர வேண்டுமென மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.