Close
நவம்பர் 22, 2024 12:44 மணி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா:  விருது பெறும் படைப்புகள் அறிவிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா விருதுகள் பெறும் படைப்புகள் அறிவிப்பு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நடத்தி வருகின்றன.

புத்தகத் திருவிழாவையொட்டி கடந்த 2020-2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெளியான சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. பரிசீலனைக்கு வரப்பெற்ற நூல்களில் நடுவர்களால் விருதுகளுக்கு உரிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மரபுக் கவிதையில் சக்திக்கனல் எழுதிய ‘சக்திக்கனல் மரபுக் கவிதைகள’ நூலுக்கும், புதுக்கவிதையில் நந்தன் கனகராஜ் எழுதிய ‘அகாலத்தில் கரையும் காக்கை’ நூலுக்கும், ஹைக்கூவில் கவி விஜய் எழுதிய ‘இலை வடிவில் வெயில்’ என்ற நூலுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.

சிறுகதைக்கு செந்தமிழினியன் எழுதிய ‘பிருந்தாஜினி’ என்ற நூலும், புதினத்திற்கு லஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஆனந்தவல்லி’ என்ற நூலும், கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைக்கு கி.பார்த்திபராஜா எழுதிய ‘சாமீ’ என்ற நூலும், அரசியல், சமூகம், வரலாறு, கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த கட்டுரைக்கு சதீஸ் செல்வராஜ் எழுதிய ‘குளிரும் தேசத்து கம்பளிகள்’ என்ற நூலும், சிறார் இலக்தியத்திற்கு சரிதா ஜோ எழுதிய ‘மந்திர கிலுகிலுப்பை’ என்ற நூலும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இணையப் படைப்புகளுக்கான புனைவுப் பிரிவில் ஜனநேசன் எழுதிய ‘புதியன புகுதல்’ என்ற சிறுகதையும், கட்டுரைப் பிரிவில் டாக்டர் சு.நரேந்திரன் எழுதிய ‘அறிவியல் தமிழ் நேற்றும் இன்றும்’ என்ற கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் படைப்பாளிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் 7 அன்று மாலை 6.00 மணியளவில் புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெறும். புத்தத்திருவிழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதுக்கும் விருதுப் பட்டயத்துடன் சான்றிதழ் மற்றும் ரூ.5,000 ஆயிரம் பரிசும் வழங்கப்பட உள்ளது. விருதுகளை நீதியரசர் சந்துரு வழங்கி பாராட்டுரை வழங்குகிறார்.

Attachments area

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top