Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

கல்வி உதலித்தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 -ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும்(Postmatric Scholarship).

11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர்-ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் (Postmatric Scholarship),

தொழில் மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை (Merit-cum-Means based scholarship) பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணைய தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் (NSP) ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (Nodal Officer) ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும்.

புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT  குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியருக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http:www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top