Close
நவம்பர் 10, 2024 7:04 காலை

நீங்கள் யார் என்பதை இந்த உலகுக்கு அடையாளப்படுத்துவது கல்வி மட்டும்தான்: கவிஞர் தங்கம்மூர்த்தி

புதுக்கோட்டை

புதுகை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியி்ல் நடைபெற்ற வகுப்புகள் தொடக்க விழா

நீங்கள் யார் என்பதை இந்த உலகுக்கு அடையாளப்படுத் துவது கல்வி மட்டும்தான் என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி.

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 27 -ஆம் ஆண்டின்  முதலாம் ஆண்டு வகுப்பு,  நேரடி  இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ஆர்.ஏ .குமாரசாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தேசிய நல்லாசிரியர் விருதாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் பாடப் புத்தகங்கள் வழங்கி பேசியதாவது: கல்விதான் மிகச் சிறந்த செல்வம்.  நான் உயிரோடு இருப்பதற்கு என்  பெற்றோர் காரணம் . நான் உயர்வோடு இருப்பதற்கு என் ஆசிரியர்களும்  அவர்கள் தந்த கல்வியும்தான் என்று  மாவீரன் அலெக்ஸாண்டர்  கூறுவார்.
கல்வி மட்டுமே உங்களை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.
பெற்றோர்களை நீங்கள் மதிக்க வேண்டும் . அவர்கள்தான் உங்களை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் . நீங்கள் கல்வி கற்று  நீங்கள் யார் என்று இந்த உலகிற்கு அடையாளப் படுத்துங்கள் என்றார் தங்கம்மூர்த்தி .
புதுக்கோட்டை
செயலாளர் பி. கருப்பையா , பொருளாளர்  ஆர்.எம்.வீ.  கதிரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கல்லூரியின் முதல்வர் எம்.ஆர். ஜீவானந்தம் வரவேற்றார்.    துறைத் தலைவர் திருமலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்          முதலாமாண்டு துறைத் தலைவர் விக்னேஸ்வரன் நன்றியுரை கூறினார் .
விழாவில் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் துறைத்தலைவர்கள்   ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலர்கள்  செய்திருந்தனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top