Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

அரசு ராணியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தகத் திருவிழாக்குழு சார்பில் திருக்குறள் நூல் பரிசு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் வழங்குகிறார், ஆட்சியர் கவிதா ராமு

புத்தகத்திருவிழா நடைபெறும் நாள்களில் பிறந்த குழந்தைகளுக்கு  திருக்குறள்  நூல்  பரிசளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 29 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.  புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில், புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 28 குழந்தைகளுக்கு இன்று 5.8.2022 அரசு ராணியார் மருத்துவமனையில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாக்குழு சார்பில் திருக்குறள் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரிசளித்தார்.

 இந்த நிகழ்வில் கோட்டாட்சியர் கருணாகரன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு. பூவதி, நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி, கவிஞர் தங்கம் மூர்த்தி, மருத்துவர். வீ.சி.சுபாஷ் காந்தி, ஆராய்ச்சியாளர் ராஜ்குமார், கவிஞர் முருகேஷ்.

அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் வீரமுத்து, இயக்க உறுப்பினர் மணவாளன், ஜெயபாலன், பேராசிரியர் விஸ்வநாதன், ஆசிரியை கீதா, ஆசிரியை கீதாஞ்சலி மஞ்சன், புத்தக விழாக்குழு சதாசிவம் ,அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top