தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விசைத்தறிகளுக்கு தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100 -க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையார்கள் மனு அளித்தனர்.
தமிழக அரசு விசைத்தறி கூடங்களுக்கு 32 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தி உள்ளது.இதன் காரணமாக விசைத்தறி கூடங்கள் மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் ஏற்கெனவே நூல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு என்பது கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.