Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்துறையில் 5 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் பேசுகிறார் எம்எல்ஏ சின்னத்துரை

அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 2 -ஆவது மாநாடு புதுக்கோட்டையில் வியாழக் கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி.சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.தங்கவேல் கொடியேற்றினார். க.கிரிஜா அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயலாளர் பி.ஜீவா பேசினார். மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் வேலை அறிக்கையை வாசித்தார். கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை சிறப்புரையாற்றினார்.

மாநாட்டை வாழ்த்தி விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, மாநிலக்குழு உறுப்பினனர் டி.சலோமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் ஆகியோர் பேசினர்.

புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் நிறைவுரையாற்றினார். தலைவராக எம்.தங்கவேல், செயலாளராக எம்.கணேஷ், பொருளாளராக ஜி.சரவணன், துணைத் தலைவர்களாக கே.சண்முகம், க.கிரிஜா, மாலதி, துணைச் செயலாளர்களாக அன்பழகன், செங்கொடி, ராதிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக எம்.கணேஷ் வரவேற்றார். வி.ரமேஷ்  நன்றி கூறினார்.

தமிழ்நாடு வருவாய்த்துறையின் அரசாணைப்படி மாதந் தோறும் கோட்டாட்சியர் தலைமையிலும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவேண்டும்.

புதுக்கோட்டை
மாநாட்டில் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள்

அதே போல நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறை பாடுகளைக் களைவதற்கு மாதந்தோறும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குனர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற வேண்டும். மேற்கண்ட கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படுவ தில்லை. தமிழக அரசு தலையிட்டு மேற்படி கூட்டங்களை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும்.

அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். உதவித்தொகையை மாற்றுதிறனாளி நலத்துறையிலிருந்தே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top