Close
நவம்பர் 22, 2024 2:35 மணி

கவிதைப் பக்கம்… பட்டிக்காடு…

புதுக்கோட்டை

பட்டிக்காடு.. கவிதை- மருத்துவர் மு. பெரியசாமி

பட்டிக்காடு…

கதவுகள் இல்லாதவீடுகள்
கண்ணிமைக்காமல்
காவல் காக்கும்
காசு பணம் இல்லாத
கலாச்சாரமே
அங்கு
தினம் நடக்கும்

உழவுத்தொழில்தான்
அங்கு
உயிர் வளர்க்கும்
உண்மை பேசினால்தான்
அங்கு
உறவுகள் மதிக்கும்

மாட்டிற்கும்
மனிதனுக்கும்
மாறாத பந்தம் இருக்கும்
மனிதனைப்போலவே
மாடும்
இரவுபகல் பாராமல்
உழைக்கும்

வெளிச்சம்
குறைந்தபோதும்
வேலைவெட்டி நடக்கும்,
வெயில்
வியர்வையில்தான் குளிக்கும்
விடியற்காலையில்
வெள்ளி வந்து
குடிசையெங்கும்
விளக்கேற்றி வைக்கும்

கார்காலம் வந்து
கை கொடுத்து தூக்கும்
காடும்
கலனியும் விளைந்து
கவலைகளை தீர்க்கும்
கன்னித்தமிழ் பேச்சு
காதுகளில் இனிக்கும்

விளைந்தால்தான்
விழாக்கள் நடக்கும்
விண்ணும் மண்ணும்
அவர்களை
விரல் கொண்டு அனைக்கும்
வெகுளியான மனிதர்களை
வெள்ளி நிலா
பார்த்து ரசிக்கும்

ஒற்றமையே ஊற்றாக
உறவுகளே
இசைக்கீற்றாக
பற்றும் பாசமும்
கொண்ட பூமியே
பட்டிக்காடு!

மரு.மு.பெரியசாமி-புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top