Close
செப்டம்பர் 20, 2024 7:44 காலை

காஞ்சிபுரத்தில் லோக் அதலாத் : 254 வழக்குகளில் ரூ.6.85 கோடிக்கு தீர்வு

காஞ்சிபுரம்

விபத்து வழக்கில் இறந்தவர் மனைவி சத்தியவாணிக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.50லட்சத்துக்கான காசோலை மற்றும் ஆவணங்களை வழங்கும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் (பொறுப்பு) நீதிபதி எம்.இளங்கோவன்.

காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம்.இளங்கோவன் தலைமை வகித்து விசாரணையை தொடக்கி வைத்து பேசினார்.

சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான கே.எஸ்.கயல்விழி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, நீதிபதி ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் ஹரிஹரன் வரவேற்றார்.

இதைத்தொடர்ந்துநடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையில்  254 வழக்குகளில் சமரச தீர்வு ஏற்பட்டு இதற்கான இழுப்பீட்டு தொகையாக ரூ. 6 கோடியே 85 லட்சத்து 30 ஆயிரத்து 252 ரூபாய் வழங்கப்பட்டது.

இதில் முக்கிய வழக்காக காஞ்சிபுரத்தில் மின்வாரிய கணக்கீட்டாளராக பணிபுரிந்து வந்தவர் சங்கர் (42).இவர் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக இழப்பீட்டுத் தொகையாக சங்கரின் மனைவி சத்தியவாணி யிடம் ரூ.50 லட்சத்துக்கன காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி(பொறுப்பு)எம்.இளங்கோவன் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top