புதுக்கோட்டை நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுதந்திர விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை:
புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கே.எச்.சலீம் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி வைத்து பேசுகையில், நமது இந்தியாவின் பெருமைகளையும் அதற்காக பாடுபட்ட தியாகிகள் பற்றியும் நமது நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு உண்டான சிறப்புகளையும் நாம் இந்தியர் என்பதில் எப்பொழுதும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
விழாவில் கொடி வணக்கம் பாடி சிறப்பிக்கப்பட்டது. கொரனோ தடுப்பு விதிமுறைகள்படி மருத்துவமனை பணியாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இறுதியாக நாட்டுப்பண் இசைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இருக்கை மருத்துவர்கள் பிரியங்கா, அறிவரசு, மருத்துவம னையின் பொதுமேலாளர், செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி:
நாட்டின் 75 -ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவுக்கு பள்ளியின் தாளாளர் கருணைச் செல்வி தலைமை வகித்தார். பள்ளியின் மேலாண்மை இயக்குநர் கௌதம் வரவேற்றார். உலகத் திருக்குறள் பேரவையின் செயலாளர் சத்தியராம் இராமுக்கண்ணு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக பள்ளியின் முதல்வர் நன்றி கூறினார்.
ஆதிகாலத்து அலங்கார மாளிகை புதுக்கோட்டை கிளை:
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள ஆதிகாலத்து அலங்கார மாளிகை வாயிலில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில், கம்பன் கழகச்செயலாளர் ஆர். சம்பத்குமார் பங்கேற்று தேசிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில், நிறுவன உரிமையாளர்கள் ஜெயபால், தி.அருண், மாவட்ட வர்த்தகக் கழகத் தலைவர் எம்.சாகுல் ஹமீது, ஆடிடட்டர் லெச்சுமணன் நிறுவன ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை
பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. நிறுவனத்தில் முன்பு தேசியக் கொடியையேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக சேதுபதி அம்பலகாரர் மற்றும் பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அணிவகுப்பு ஊர்வலத்தை காவல் ஆய்வாளர் தனபாலன் துவைக்கிவைத்தார்.
சிவன் கோயில் அருகில் துவங்கிஅணிவகுப்பு ஊர்வலம் பேருந்து நிலையம், அண்ணாசாலை வழியாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் அனைத்து பிரிவு மேலாளர்கள்,த ள மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நிர்வாக மேலாளர் வீரையா வரவேற்றார். மேனேஜர் நாகராஜன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம்:
காட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற விழாவில் சங்க நிர்வாகிகள் தேசியக் கொடியேற்றி வைத்தனர். தொடர்ந்து சங்கத்தின் சார்பில் பள்ளிக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் பள்ளி:
புதுக்கோட்டை கூடல் நகர் ஈரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில்சுதந்திர தினவிழா நடைபெற்றது விழாவுக்கு தாளாளர் கவிஞர் ஆர்எம்வீ . கதிரேசன் தலைமை வகித்தார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் தேவி கீர்த்தனா வரவேற்றார்.
சிறப்பு விருந்தின ராக பாண்டியன் புத்தக நிலைய நிர்வாகி முத்து பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்து தேசிய தலைவர் வேடமணிந்து வந்த சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் . நிறைவாக ஆசிரியை ரூபா நன்றி கூறினார் நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் திவ்யா, அமலா தொகுத்து வழங்கினார்கள் .
இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை:
வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவுக்கு சங்கத் தலைவர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
டாக்டர் முகமது சுல்தான் வாழ்த்துரை வழங்கினார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்த டாக்டர் சலீம் டாக்டர் அப்துல் குத்தூஸ், டாக்டர் நவரத்தினசாமி, டாக்டர் ஜானகி ரவிக்குமார், டாக்டர் ராம்ராஜ், டாக்டர் தர்ம பாலன் ஆகியவர்களுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டது. நிறைவாக டாக்டர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.