Close
நவம்பர் 22, 2024 4:59 மணி

வீடுதோறும் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடிகளை அப்புறப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள்: ஆட்சியருக்கு கோரிக்கை

புதுக்கோட்டை

தேசியக்கொடியை அப்புறப்படுத்தி பத்திரப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

வீடுதோறும் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடிகளை அப்புறப் படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக ஜோமன் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கை: 75 வது சுதந்திர கொண்டாட்டத்தை ஒன்றிய அரசு நாம் எல்லோரும் வீடுகளில் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆனால் அந்த கொடியை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களுக்கு தெரியாதபட்சத்தில், தேசிய கொடி பல இடங்களில் நம் கண்களில் பட வாய்ப்புள்ளது. ஆனால் அந்த சூழலில் பொதுமக்கள் என்ன செய்தால் நல்லது என்பதை  மாவட்ட நிர்வாகம் எடுத்துக்கூறி வலியுறுத்த வேண்டும்.

தேசியக் கொடியை பறக்கவிட ஒவ்வொரு பொது மக்களுக்கும் உரிமை இருப்பது போல், அதை பாதுகாக்கவும் மாண்பு கெடாமல் அப்புறப்படுத்துவதும் பொதுமக்கள் ஒவ்வொருவரின் கடமைதான். அதன்படி நமது கொடியை நாம் பத்திரமாய் பாதுகாத்து வைக்க வேண்டும்.

வெளியே எங்கேனும் தேசியக் கொடிகள் மாண்பு சிதையும் வண்ணம் கண்டால் அதை எடுத்து குறைந்தபச்சம் அருகில் இருக்கும் அரசு அலுவலகங்களில் ஒப்படைத்து விட வேண்டும். அவர்கள் முறைப்படி அதை கண்டிப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள். எனவே பொதுமக்களுக்கு இந்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த முன்வர வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top