Close
செப்டம்பர் 20, 2024 7:02 காலை

ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

புதுக்கோட்டை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கிராமசபைக்கூட்டத்தில் தீர்மானம்

ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி கறம்பக்குடி ஒன்றியம்,  மாங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 7 -ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் கூட்டமைப்பு சார்பில் சமூகநீதி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தலைவர் மேனாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேனாள் தேர்வாணைய குழு உறுப்பினர் சமூக நீதிப் போராளி  இரத்தினசபாபதி  ஆணைக் கிணங்க, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் நமது மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்  ராஜமாணிக்கத்தின்  அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு திருத்தமும் செய்யக் கூடாது என ஊராட்சி பொதுமக்கள் சார்பில் தீர்மானம் கொண்டுவரப் பட்டது.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி ஒன்றியம் மாங்கோட்டை ஊராட்சியிலும், எம் தெற்கு தெரு ஊராட்சியிலும், தீத்தாணிப்பட்டி ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களின் கையெழுத்திட்ட மனுவினை ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரிடத்திலும் ஊராட்சி பொதுமக்களும் பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நமது மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சரவணதேவா, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆலங்குடி பாலையன், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில மாணவரணி செயலாளர் ஜெயக்குமார், நமது மக்கள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் இராம சுரேஷ் வர்மன், நமது மக்கள் கட்சி மாநில மகளிர் அணி செயலாளர் மாலா ஆறுமுகம் ஆகியோர் மனுவினை கொடுத்தனர்.

திருவரங்குளம் ஒன்றியம் கொத்தகோட்டை ஊராட்சியிளும் மாங்கனாம்பட்டி ஊராட்சியிளும் பாச்சிக்கோட்டை ஊராட்சிகளிலும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் ஏவூர் ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top