Close
நவம்பர் 22, 2024 6:28 காலை

மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்

சென்னை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட ஜி.ரவிக்கு, அதற்கான ஆணையை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா, வேலூர் திருவள்ளுவர்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து அதற்கான ஆணைகளை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அழகப்பா பல்கலைக்கழகம்:

காரைக்குடி அழகப்பா பல்கலை க்கழகத்தின் துணைவேந் தராக ஜி.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 27 ஆண்டுகளுக்கு மேலான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தையும், 7 ஆண்டு நிர்வாக அனுபவத்தையும் பெற்றவர்.

இவர் அழகப்பா பல்கலை கழகத்தில் பல நிர்வாக பதவிகளை வகித்திருக்கிறார். 2021ம் ஆண்டில் பெங்களூரு தேசிய சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் அப்துல்கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்:

சென்னை
மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் என். சந்திரசேகர்

இந்த பல்கலைக்கழகத்துக்கு என்.சந்திரசேகர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தையும், 17 ஆண்டு நிர்வாக அனுபவத்தையும் கொண்டவர். மேலும் 21 ஆராய்ச்சி அறிஞர்களுக்கு வழிகாட்டி இருக்கிறார். கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்துக்காக 13 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். பிரேசில் சர்வதேச வளர்ச்சிக்கான புவி அறிவியல் சங்கத்தின் வில்லியம் கோல்ட்ஸ்மித் விருது உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்:

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டி.ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் சுமார் 32 ஆண்டுகள் சிறந்த கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தையும், 11 ஆண்டு நிர்வாக அனுபவத்தையும் கொண்டவர். தற்போது கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தின் தோட்டக் கலைத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார். 2020- 21-ம் ஆண்டில் கனடாவின் சர்வதேச மோரிங்கா ஆராய்ச்சி நிறுவனத்தால் மோரிங்கா விஞ்ஞானி விருதை பெற்றுள்ளார்.

இவர்களுக்கான நியமன ஆணைகளை பல்கலைக்கழகங் களின் வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி வழங்கினார். அப்போது கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் உடன் இருந்தார். 3 பேரும் பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் பல்கலைக்கழக துணைவேந்தர்களாக இருப்பார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top