Close
நவம்பர் 21, 2024 11:56 மணி

பராமரிப்பு பணி முடிந்து புறப்பட்டுச் சென்றது அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ் டிரியூ

சென்னை

பராமரிப்பு பணிகளை முடித்து அனுப்பி வைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ் டிரியூ

பழுது மற்றும் பாராமரிப்பு பணிகளுக்காக சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் கடந்த ஆக.7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை கப்பலான சார்லஸ் டிரியூ பணிகளை நிறைவடைந் ததையடுத்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் சென்னை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் எல்.அன்.டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரின் தேவைக்காக புதிய கப்பல்களை கட்டுதல் பராமரித்தல் பழுது பார்க்கும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க கடற்படை கப்பலான சார்லஸ் டிரியூ பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிக்காக  காட்டுப் பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்கு கடந்த ஆக.7-ஆம் தேதி வந்தடைந்தது. அப்போது நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் டாக்டர் அஜய்குமார் கலந்து கொண்டு முறைப்படி வரவேற்றார்.

அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று இந்தியாவில் பழுது மற்றும் பராமரிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது . இந்திய அமெரிக்க வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் ஆகும்.  கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்க ளின்படி .கப்பல் பராமரிப்பு பணி நிறைவுற்றதையடுத்து சார்லஸ் டிரியூ வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது.  இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சுமார் 35 கடல்சார் நாடுகளின் பாதுகாப்பிற்கு இதுபோன்ற கப்பல்கள் உறுதுணையாகச் செயல்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top