காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 11–ஆவது துணை வேந்தராக முனைவர் க.இரவி பொறுப்பேற்றுக்கொண்டார்
வேலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சாக்கான்குடி என்ற சிற்றூரில் பிறந்த இவர் 1995 -ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து, இயற்பியல் துறை தலைவராக இருந்து வந்தார். இவர் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் 27 ஆண்டுகள் சிறந்த அனுபவம் பெற்றவர். அதோடு 7 ஆண்டுகள் நிருவாக பணி அனுபவமும் பெற்றவர்.
தொழில் மற்றும் ஆலோசனை பிரிவு முதன்மைர், இயற்பியல் அறிவியலின் தலைவர், இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், உள்தர மதிப்பீடு உறுதி மையத்தில் இயக்குநர் மற்றும் கல்விசார் பாடத்திட்ட குழுக்களின் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர்.ரூ1.54 கோடி மதிப்பீட்டில் 8 ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தி யுள்ளார். 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
இவரது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை 6842 ஆராய்ச்சி யாளர்கள் மேற்கோள்காட்டியுள்ளனர். 363 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
மேலும் 8 ஆராய்ச்சி காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். பெங்களூரு தேசிய சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் கடந்த 2021 -ஆம் ஆண்டு டாக்டர் அப்துல் கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. ஜப்பான் ஷிசுஒகா பல்கலைக்கழகத்தில்
கௌரவ மற்றும் வருகை பேராசிரியராகவும் பணியாற்றி யுள்ளார். இலண்டன் ராயல் கெமிஸ்ட்ரி உறுப்பினர் மற்றும் சென்னை அறிவியல் அகாடமி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
ஜப்பான் நாட்டின் தேசிய பொருள் அறிவியலில் மேலாய்வு ஆராய்ச்சி முடித்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 விருதுகளை பெற்றுள்ளார் இவரது வழிகாட்டுதலில் 25 ஆராய்ச்சி மாணவர்கள் முனைவர் பட்டமும் 49 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளனர்.
மேலும் கல்வி மற்றும் ஆராய்ச்சி தரத்தை மேம்படுத்துவதற் காக 23 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியல் அறிவியலில் முதுமுனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்வியாளர்களுக் கான தலைமை பண்பு பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவின் மொனாஸ் பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது