Close
நவம்பர் 22, 2024 7:06 காலை

ஈரோடு வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா

ஈரோடு

ஈரோட்டில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காளிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் பி. கே. சேதுராஜ் கூறியதாவது:  காலிங்கராயன் பாசன விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். பாசன கால்வாயில் உள்ள மதகுகள் பாலங்கள் பழுதடைந்துள்ளன. பாசன பகுதியில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்க வேண்டும்.

பாசன கால்வாய் மராமத்துக்கு அரசு  80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. ஆனால் பணிகள் சரிவர நடைபெறவில்லை. பாசன கால்வாய் ஆயக்கட்டில் உள்ள சுமார் 1200 ஏக்கரில் செங்கல் சூளைக்காக மண் அள்ளப்படுகிறது.  இதே நிலை தொடர்ந்தால் ஆயக்கட்டு காணாமல் போகும்.

தட பள்ளி அரக்கன் கோட்டைமற்றும் கீழ் பவானி பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். ஆனால் காலிங்கராயன் கால்வாய் தண்ணீர் திறக்கும் போது அவர்கள் பங்கேற்பதில்லை. இது போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து பல மனுக்கள் அளிக்கப்பட்டும்,  எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவே போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார் .

அரசு அதிகாரிகள் அவரது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததும் போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு சிறு குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு பேசியதாவது:  மொடக்குறிச்சி வட்டாரத்தில் விவசாய நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசு உயர்த்தி வழங்கிய இழப்பீடுபல விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. தயிர் மற்றும் அதன் உப பொருள்கள் உணவு தானியங்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வாபஸ் பெற வேண்டும். சொட்டுநீர் பாசனத்துக்கு வழங்கும் மானியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு ஏக்கருக்கு ரூபாய் 40 ஆயிரம் மானியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நத்தம் பகுதியில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டாக்களை உடனே வழங்க வேண்டும்.

கீழ்பவானி கால்வாய் புனரமைப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஒப்பந்த பணிகளை சில சமூக விரோதிகள் தடுப்பதாக கூறியுள்ளா.ர் இவ்வாறு திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளை இவ்வாறு கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது.

கரும்பு வெட்டுக்கூலி மற்றும் லாரி வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே கரும்புக்கான ஆதார விலையைஅரசு டன்னுக்கு ரூபாய் 4000 என உயர்த்தி வழங்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா உட்பட பல உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top