Close
நவம்பர் 22, 2024 12:33 மணி

சம்பா சாகுபடிக்காக புதுக்கோட்டைக்கு ரயில் மூலம் வந்த உரங்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டைக்கு ரயில் மூலம் வந்த சம்பா சாகுபடிக்குத்தேவையான உரங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியாஉரம் 2108 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து இரயிலில் புதுக்கோட்டைக்கு வந்தது.

புதுக்கோட்டைமாவட்டத்தில் தற்போது சம்பாநெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா 4664 மெட்ரிக் டன்கள்,டிஏபி 2053மெட்ரிக் டன்,பொட்டாஷ் 868 மெட்ரிக் டன்,காம்ளக்ஸ் 5011மெட்ரிக் டன்களும் இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தூத்துகுடியிலிருந்து தற்போது கிரிப்கோயூரியா 1323 மெட்ரிக் டன்கள், ஸ்பிக்யூரியா785 மெட்ரிக் டன்கள், மேலும் டிஏபி 191மெட்ரிக் டன்கள்,காம்ளக்ஸ் 243 மெட்ரிக் டன்கள் சூப்பர் 63மெட்ரிக் டன்கள் ஆகியன இரயிலில் புதுக்கோட்டைவந்துசேர்ந்தது .

இது கூட்டுறவுமற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனை வேளாண்மை இணை இயக்குநர் மெ.சக்திவேல் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, தரக்கட்டுபாடு வேளாண் உதவி இயக்குநர் மு.மதியழகன், தரக்கட்டுப்பாடு வேளாண் அலுவலர் சி. முகமதுரபி, கிரிப்கோமற்றும் ஸ்பிக் நிறுவனஅலுவலர்களும் உடனிருந்தனர்.

உரங்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும் , உரிய விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுதிடவும், வேளாண்மைத் துறை  மூலம் அவ்வப்போது உர ஆய்வாளர்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை உர உரிமைதாரர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி உள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உரங்களை பிறமாவட்டங்களுக்கு அனுப்பக் கூடாது. உரங்க ளை, உர மூட்டையின் மேல் காணப்படும் அதிகபட்ச விற்ப னை விலைக்கு மேல் விற்பனை செய்தாலோ, விற்பனை உரிமத்தில் உரிய அனுமதியின்றி பெறப்பட்ட நிறுவனத்தின் உரங்களையோ, உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிரவேறு இடத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்தாலோ உர உரிமம் இரத்துசெய்யப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது தங்கள் சாகுபடிக்கு தேவையான உரங்களை தங்களதுஆதார் எண்ணைப் பயன்படுத்திபெற்றுக் கொள்ள வேண்டும். கட்டாயமாக உரங்களுக்கான ரசீதுகளையும் கேட்டுபெற்றுக் கொள்ள வேண்டுமென  அறிவுறுத்தப்படுகிறது.

எனவே,புதுக்கோட்டைமாவட்டசில்லரை உர விற்பனையாளர் கள் உரக்கட்டுப்பாட்டுஆணையின்படி, உர விற்பனை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆய்வின் போது குறை பாடுகள் ஏதும் கண்டறியப்பட்டால் உர உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் புதுக்கோட்டைமாவட்டவேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top