Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

உலக மண் நாள்… விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுமென வேளாண்துறை தகவல்

புதுக்கோட்டை

டிச5 - உலக மண் நாள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும்  உலக மண் தினம் 05.12.2022 அன்று மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

நிலத்தின் வளம் நன்றாக இருந்தால்தான் நல்ல பயிர் வளர்ச்சியும் நல்ல மகசூலும் கிடைக்கும். விவசாயிகள் பயிர் சாகுபடியில் மகசூலை அதிகரிக்க பல்வேறு வேளாண் தொழில் நுட்பங்களை பயன்படுத்திவருகின்றனர். இதில் குறிப்பாக மண் வளத்தினை சிறப்பாக பேணுவதன் மூலம் அதிக மகசூல் பெறமுடியும்.

மேலும் பயிருக்கு தேவையான உரங்களை மண் வளத்திற்கு ஏற்றவாறு உரம் இடுவதனால் மண் உவர் நிலமாக மாறுவதை தடுப்பதோடு, உரச்செலவினை குறைத்து பயிர் மகசூலை அதிகரிக்கலாம். எனவே விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண் வளத்தின் அடிப்படையில் உரமிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மண்வளத்தின் முக்கியத்துவம் குறித்து உலக அளவில் டிசம்பர் 5 ஆம் தேதி அன்று உலக மண் தினம் கடைபிடிக்கப் படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நடத்திட திட்டமிடப்பட் டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top