Close
நவம்பர் 22, 2024 5:02 மணி

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெற இகேஒய்சி பதிவு அவசியம்

புதுக்கோட்டை

பிஎம் கிஸான் திட்டம்

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு உடனடியாக இகேஒய்சி செய்து கொள்ள வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைகள் பெறுவதற்கு இ-கேஒய்சி அவசியம் .பிஎம்கிஸான் திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசானது ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2000- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6000- வழங்கி வருகிறது.

இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்த தகுதியான விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்இ 13–வது தவணை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களைக் கொண்டு இ-கேஒய்சி செய்துகொள்வது அவசியமாகிறது.

மேலும் தங்களது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள்இ தங்களது ஆதார் எண் விவரங்களை அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது தபால் அலுவலகத்தின் தபால் சேவை மூலம் பிஎம்கிஸான் திட்ட வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

மேலும் இனிவரும் தவணை தொகைகள் அனைத்தும் ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படும் என்பதனால்இ பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறது.

எனவேஇ புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பி.எம் கிசான் திட்டத்தில் தவணைத் தொகைகளை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக இ-கேஒய்சி செய்து பயன்பெறுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top