இரவில் பனிப்பொழிவால் மணக்கும் மல்லிகை பூவின் விலை
கிலோ ரு.2310 ஆக அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
இரவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைய துவங்கியதால், சத்தி பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை கிலோ ரூ.2310 ஆக உயரந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்ற்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது. ஈரோடு, கோபி, சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கிறார்கள்.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்து உள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர துவங்கி உள்ளது.
குறிப்பாக மல்லிகை விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது. டிச., 15 ம் தேதி மல்லிகை கிலோ 1050 முதல் 1470 க்கு விற்பனையானது. நேற்று மல்லிகை கிலோ ரூ.1225 முதல் 2187 ஆக விற்பனையானது. நேற்று மேலும் 120 வரை உயர்ந்து உள்ளது.
நேற்று முன்தினம் மல்லிகை ரூ.1225–2187, முல்லை கிலோ ரூ.520 முதல் 740, காக்கடா கிலோ ரூ.600 முதல்700, செண்டு ரூ.20 முதல் 70, கோழி கொண்டை ரூ.20முதல் 100, ஜாதிமுல்லை கிலோ ரூ.750, கனகாம்பரம் கிலோ ரூ.400 முதல் 550, சம்பங்கி ரூ.60, அரளி ரூ.200, துளசி ரூ.40, செவ்வந்தி ரூ.80 க்கும் விற்பனையானது.
நேற்று மல்லிகை கிலோ ரூ.1400 முதல் 2310, முல்லை கிலோ ரூ.600 முதல்740, காக்கடா கிலோ ரூ.600 முதல் 725, செண்டு ரூ.31 முதல் 59, கோழி கொண்டை ரூ.65முதல் 135, ஜாதிமுல்லை கிலோ ரூ.750 , கனகாம்பரம் கிலோ ரூ.520, சம்பங்கி ரூ.30, அரளி ரூ.160, துளசி ரூ.40, செவ்வந்தி ரூ.80 முதல் 100 க்கும் விற்பனையானது.