Close
செப்டம்பர் 19, 2024 10:50 மணி

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு பவானிசாகர் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் போக பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. தண்ணீர் திறப்பு இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக புன்செய் பாசனத்துக்காக கீழ்பவானி திட்டம் பிரதான கால்வாய் இரட்டை படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளுக்கு 21-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்துக்காக நேற்று காலை 8 மணிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வரை தண்ணீர் அதிகரித்து திறக்கப்படும். வருகிற மே மாதம் 1-ந் தேதி காலை 8 மணி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நேற்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,526 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,250 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், பவானி ஆறும் மாயாறும் ஒன்றுகூடும் இடத்தில் உள்ளது, பவானிசாகர் அணை. 1948-ல் பத்துக் கோடியே ஐம்பது லட்சம் மதிப்பில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பவானிசாகர் அணையின் கட்டுமானப் பணி, ஏழு ஆண்டுகளில் நிறைவுபெற்றது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, 1955 ஆகஸ்ட் 19-ம் தேதி, பவானிசாகர் அணை திறக்கப்பட்டது.

ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த அணையிலிருந்து நீர் செல்கிறது. இந்த அணையால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். பவானிசாகர் அணையால் 32.8 டிஎம்சி வரையான நீரை தேக்கிவைக்க முடியும். அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top