Close
செப்டம்பர் 19, 2024 7:22 மணி

சிறுதானியங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை

புதுக்கோட்டை

புதுகையில் நடைபெற்ற விவசாயிகள் குறை கேட்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி கன்னனிவயல் கிரமத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஊராட்சி மன்ற தலைவரும் வியாபாரிகளும் ஒன்று இணைந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை தடுத்து நிறுத்தி, அதே இடத்தில் மீண்டும் இயங்கச்செய்ய வேண்டுமென  அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 162 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 42 நெல் கொள்முதல் நிலையங்கள் முழுமையாக செயல்படவில்லை என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றம்சாட்டினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விசுவநாதன், நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 க்கு மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளதாகவும் இதனை உணவுத்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மத்திய பட்ஜெட்டில் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஐநா சபை 2023  -ஆவது ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித் துள்ளது.

இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளதுடன்  இந்தியாவில் சிறு தானிய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்  என்றும் அவர்  வலியுறுத்தியுள்ளார். சிறுதானியம் தொடர்பாக  தனி வேளாண்மை பட்ஜெட் கொண்டுவரப்பட்ட வேண்டும் மாவட்டத்தில் சாகுபடி செய்த சிறுதானிய பயிர்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் .

பாஜக தேர்தல் வாக்குறுதியில் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவுட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்ற  நோய்களால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம்  உருவாகியுள்ளதால்  இந்த செரிவூட்டப்பட்ட அரிசிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் விசுவநாதன்  கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top