Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023: கிராம விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை

சிறுதானிய உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 முக்கியத்துவம் குறித்துகிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் மூலமாக 2022-23 ஆம் ஆண்டிற்கான ” கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி” புதுக்கோட்டை வட்டார குப்புடையான்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

இந்தபயிற்சியில் வேளாண்மை மற்றும் சகோதர துறையான விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையின் உதவிஇயக்குநர் ஆர்.ஜெகதீஸ்வரி  கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியை தொடக்கி வைத்து பேசியதாவது:

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 குறித்தும், சிறுதானியத்தின் முக்கியத்துவம், சாகுபடிதொழில் நுட்பங்கள்  மதிப்புக்கூட்டுதல்பற்றியும்  விதைப்பண்ணை அமைப்பது, தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பங்கள் பற்றியும் விரிவாக எடுத்துகூறினார் .

புதுக்கோட்டை வட்டார வேளாண்மை அலுவலர் த.ஸ்வர்னா மாநில அரசின் முக்கிய திட்டமான கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த கன்று வழங்குதல், உயிர்உ ரங்களின் பயன்பாடு, நுண்ணூட்ட சத்துக்களின் முக்கியத்துவம், நெல் தரிசில் பயறு சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள், நுண்ணீர்பாசனத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துகூறினார்.

உழவர்பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் செல்வி, ந.சண்முகி, உழவன் செயலியிலின் முக்கியத்துவம் பற்றியும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களில் பயன்பெற உழவன் செயலில் விவசாயிகள் முன்பதிவு செய்வது,

பயிர்காப்பீடு,  சந்தை நிலவரம், வேளாண் இயந்திரங்கள் வாடகை விடுதல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் எதிர்வரும் 2023-24  ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு விவசாயிகள் தங்கள் கருத்துகளை உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை என்னும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம் என்பது உட்பட அனைத்து சேவைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை அட்மாதிட்ட உதவிதொழில் நுட்ப மேலாளர்  அருளரசு மற்றும்  பயிர்அறுவடை பரிசோதனையாளர் பா.விஜய் ஆகியோர் செய்திருந்தார்கள். பயிற்சியின் முடிவில் வேளாண்மை அலுவலர்(உழவர்பயிற்சிநிலையம்) ந.சண்முகி நன்றியுரை கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top