Close
செப்டம்பர் 20, 2024 3:34 காலை

கோபி பகுதி விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சியளித்த மாணவர்கள்

கோபிச்செட்டிபாளையம்

கோபி அருகே விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பு பயிற்சியளித்த மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் துறையில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், கிராமப்புற தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சியளித்தனர்.

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் துறை நான்காம் ஆண்டு மாணவர்கள் ஓம்பிரகாஷ், பிரியதர்ஷன், செல்வமணி, சிவசங்கர், விக்ரம், வினத், ஆகாஷ் ஆகியோர் கிராமப்புற தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பட்டுபுழு விவசாயிகளுக்கு  பயிற்சியளித்தனர்.

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள தாசம்பாளையம் விவசாயி ராஜ கோமல், நிலத்தில் நடைபெற்ற முகாமில், மல்பெரி நாற்றாங்கால் தயாரிப்பது மற்றும் நடுவது எப்படி என்று விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதில்,  மல்பெரி செடிகள் விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. ஒரு எக்டேர் மல்பெரி தோட்டம் அமைக்கத் தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 20 சென்ட் (800 சதுர மீட்டர்) நிலம் தேவை. முதலில் வதைக்குச்சிகள் தயார் செய்ய தேர்வு செய்யப்படும்.

செடிகள் ஆரோக்யமாகவும்‌ செதில் பூச்சிகள் மற்றும் துக்ரா தாக்குதலுக்கு உட்படததாகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட குச்சிகளை 3-4 மொட்டுகள் உடைய சிறு விதைக்குச்சிகளாகவும், 15-20 செ.மீ நீளழுள்ளதாக வெட்ட வேண்டும்.

விதைக்குச்சிகளின் வேர்விடும் திறனை அதிகரிக்க அவற்றை டித்தேன் எம்-45 யில் (15 கிராம்/ 5 லிட்டர் தண்ணீர்) 30 நிமிடம் நனைத்து நடவு மேற்கொள்ள வேண்டும். 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.நடவு செய்த 90-120 நாட்களுக்குப் பிறகு மரக்கன்றுகள் பிரதான வயலில் நடவு செய்ய தயாராக இருக்கும் என்று மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியை சங்கவி பட்டு ஆய்வாளர் (கோபி),  ராஜேஸ்வரி உதவி பட்டு ஆய்வாளர் (கோபி) மற்றும் லோகநாயகி இளநிலை பட்டு‌ ஆய்வஆய்வாளர் (கோபி) ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top