Close
நவம்பர் 22, 2024 5:08 காலை

தஞ்சை டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம்: ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் வைப்பதற் காக வசாயிகள் சார்பில் கவளை சால் -என்ற நீர் இறைக்கும் வாளியை ஆட்சியரிடம் வழங்கினர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.02.2023 – வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2022-23 ஆம் ஆண்டு மேட்டூர் அணை 24.05.2022 திறக்கப்பட்டதால் குறுவை பருவத்தில் 72,816 ஹெக்டேர் பரப்பு நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. பருவத்தில் சராசரியாக 6051 கிலோ/ எக்டேர் மகசூல் கிடைக்கப் பெற்றுள்ளது.

சம்பா மற்றும் தாளடி பருவத்தில் இதுவரை 1,38,905 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபட்டுள்ளது. சம்பா பயிர் சுமார் 71325 ஹெக்டரில் அறுவடை பணி முடிந்துள்ளது. இனிவரும் கோடை பருவத்திற்கான குறுகிய கால நெல் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நெல்லுக்கு பின் உளுந்து இதுவரை 22114 ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உளுந்து விதைகள் 367 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீதம் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்திற்கு தேவையான யூரியா 5469 மெ. டன்னும், டிஏபி 1387 மெ. டன்னும், பொட்டாஷ் 1350 மெ. டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 3832 மெ.டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புதுப்பிக்கபட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 3,156 பயிர் அறுவடை பரிசோதனை தளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 1731 (தஞ்சாவூர் 1 ல் 1116 தளைகள் மற்றும் தஞ்சாவூர் II ல் 615 தளைகள்) தளைகளில் அறுவடை முடிவடைந்துள்ளது.

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 45 கிராமங்களில் கூடுதலாக 90 பயிர் அறுவடை பரிசோதனை தளைகள் மேற்கொள்ள முடிவு செய்து இதுவரை 21 பயிர் அறுவடை பரிசோதனை தளைகளில் அறுவடை முடிவடைந்துள்ளது.

மேலும் 2022-23 ஆம் ஆண்டு மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை, தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், ஜிங் சல்பேட் மற்றும் ஜிப்சம் விநியோகம்,

வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்குதல் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.பி எம் கிசான் சம்மான் (PM KISAN) விடுபட்ட நிதி பயனாளிகள் e-KYC மூலம் வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே அடுத்த தவணை பெற இயலும் .

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மொத்தம் 73 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 168 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் 50% மானிய விலையில் விதை நெல் வழங்கப்பட்டடுள்ளது. விதை உளுந்து 50 சத மானியத்தில் விதை கிராம திட்டம் உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் கீழ் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையதிற்கான இலக்கு 200 அலகு பெறப்பட்டு 5 வட்டாரங்களில் செயல்படுத்தபட்டுவருகின்றது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்கு 349 பெறப்பட்டுள்ளது. மானிய தொகையாக ரூ.13,500 ஒரு ஹெக்டருக்கு வழங்கப்படுகிறது.

நிலக்கடலை விதைகள் 23 மெட்ரிக் டன் விதைகள் சிறுதளையாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 22.5 மெட்ரிக் டன் விதைகள் தேசிய விதை கழகத்திலிருந்து பெறப்பட்டு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து CJG -32 ரகம் 5 மெ.டன் விதைகள் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சோயா பீன்ஸ் சாகுபடி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 65 மெடன் சோயா விதைகள் 1000 எக்டர் சாகுபடி பரப்பிற்கு 50 சதவிதம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்திட்டத்தில் 2 லட்சத்து 65 ஆயிரம் எண்கள் இலக்கு பெறப்பட்டு, சாகுபடி நிலங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்கு ஆயிரம் ஹெக்டேர் பெறப்பட்டு பூதலூர், திருவோணம் மற்றும் தஞ்சாவூர் வட்டாரங்களில் செயல்படுத்திடும் வகையில் பயனாளிகள் தேர்வு செய்யபட்டு விதைகள், இடுபொருட்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.

மேலும், அனைத்து பயன்களும் பெற வேளாண்மை துறை மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள உழவன் செயலியை அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் பதிவேற்றம் செய்து வேளாண் துறை சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அறிந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிகழும் 2022-23ம் ஆண்டில் கலைஞரின் திட்டத்தின் கீழ் 168 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் காய்கறி விதைத்தளைகள் விநியோகம், காளான் உற்பத்தி கூடம் அமைத்தல், பல்லாண்டு தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு விரிவாக்கம், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல்

மற்றும் சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல் இனத்தில் 29641 எக்டர் / எண்கள் பொருள் இலக்கு மற்றும் ரூ.149.855 இலட்சம் நிதி இலக்கில் 75 சதம் மற்றும் 100 சதம் மானியத்தில் திட்டம் செயல்படுத்திட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 80 சதவீதம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப் பயன்களை பெற பயனாளிகள் tnhorticulture.tn.gov.in (TN-HORTNET) இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கும்பகோணம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பாபநாசம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை இந்த 5 உழவர் சந்தைகளிலும் ரூ. 5,470 லட்சம் மதிப்பில் 16,000 மெ.டன் காய்கறி வரத்து ஆகியுள்ளது. இதுவரை 47,584 விவசாயிகளும் 25,10,802 நுகர்வோரும் பயனடைந்துள்ளார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளரச்சி திட்டம் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் கூட்டுப்பண்ணையத்திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர்பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்ங்களின் மூலம் 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் 359.16 இலட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 13,463 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள்.

நடப்பாண்டிற்கு தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்திற்கு 2297 விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆண்டு இலக்கீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 01.04.2022 முதல் 10.01.2023 வரை 2371 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 137 விவசாய மின் இணைப்புகள் வழங்கபட்டு உள்ளது.

பழுதான மின்மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டுவருகிறது. நடப்பாண்டில் ஜனவரி மாதம் 161 புதிய மின்மாற்றிகள் ரூ.4 கோடியே 83 இலட்சம் செலவில் மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.தற்சமயம் தஞ்சை காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் சாகுபடிக்காக 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..

காரீப் 2022-2023 மார்க்கெட்டிங் பருவம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் மறு வருடம் செப்டம்பர் 30-ந் தேதி வரை நெல் கொள்முதல் செய்யப்படும் காலமாகும்.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் அரசு ஆணை (4D)No.6 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (பி1) துறை நாள். 01.09.2022 -ன்படி நடப்பு ஆண்டு காரீப் பருவம் 2022-2023-க்கு கடந்த 01.09.2022 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறுவை பருவத்தில் 391 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.

கே.எம்.எஸ் 2022-2023-ல் 01.09.2022 முதல் நெல் வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் பரவலாக தேவையின் அடிப்படையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கே.எம்.எஸ் 2022-2023 பருவத்திற்கு 01.09.2022 முதல் நெல்லுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய ஆதார விலை மற்றும்

மேலும், இதுவரை விவசாயிகள் 98,194 (பயனாளிகள்) நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் பயனடைந்துள்ளனர். விற்பனை செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகை விவசாயிகளுக்கு ரூ.977/-கோடி மின்னனு வங்கிப்பண பரிவர்த்தனை (ECS) மூலமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழம் தொடர்பான ஏதேனும் விவரம் தேவைப்பட்டால், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், தஞ்சாவூர். 04362 – 235321 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்   என்றார் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top