Close
நவம்பர் 22, 2024 12:37 மணி

புதுக்கோட்டை மாவட்ட குறுவை சாகுபடிக்கு ரயில் மூலம் வந்த யூரியா உரம் 1312 மெட்ரிக். டன்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டைக்கு தூத்துக்குடியிலிருந்து ரயிலில் வந்த யூரியா

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு தேவை யான யூரியா உரம் 1312 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது பெறப்படும் மழையினைத் தொடர்ந்து நீர் நிலைகளில் நீர் இருப்பினை பயன்படுத்தி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளிலும், நெற் பயிருக்கு மேலுரம் இடுவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் குறுவை பருவ நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் 1312 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து கிரிப்கோ நிறுவனத்தின் உரங்கள் சரக்கு இரயில் மூலம் மாவட்டத்திற்கு வரப்பெற்றது. இவைகள் அனைத்தும் டான்பெட் நிறுவனத் தின் மூலம் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்திலுள்ளள சில்லரை உர விற்பனையாளர் கள் உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிக ளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.

உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் இது குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அவர்கள் மற்றும் மாவட்ட உரக் கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட் டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும் உரங்களை விற்பனை செய்வதும் கூடாது. இதில் ஏதேனும் குறைபாடுகள்; கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன் படி உர உரிமம் இரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  புதுக்கோட்டை மாவட்டவேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top