Close
நவம்பர் 21, 2024 7:20 மணி

புதுக்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை இலங்கை அலுவலர்கள் களப்பயிற்சி

தமிழ்நாடு

புதுக்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை இலங்கை அலுவலர்கள் பார்வையிட்டனர்

புதுக்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை இலங்கை அலுவலர்கள் பார்வையிட்டனர்
இலங்கை கேரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 40 அலுவலர்கள் புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

கேரிட்டாஸ் நிறுவனம் இலங்கையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தும் கிராம அறிவு மையம் போன்று இலங்கையில் கிராம அறிவு மையங்களை அமைத்து விவசாயிகள் மற்றும் மற்ற பிரிவினர்களுக்கும் பயன்படும் வகையில் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

கிராம அறிவு மையங்களை எவ்வாறு அமைப்பது, செயல்படுத்துவது, பிற துறைகளுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது, என்னென்ன சேவைகளை கிராம மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்த முடியும் போன்றவைகளைப்பற்றி பயிற்சி பெறுவதற்காக புதுக்கோட்டைக்கு வந்திருந்தனர்.

இவர்களுக்கான பயிற்சி எண்ணெய் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மேலப்பட்டி கிராம அறிவு மையத்திலும், புதுக்கோட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகத்திலும் நடைபெற்றது.

புதுக்கோட்டை
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகள் பற்றி பேசுகிறார், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார்

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார்,  எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகள், கிராம அறிவு மற்றும் வள மையங்கள் மூலம் வளம்குன்றா வேளாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார்.

புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் துடன் வேளாண்மைத்துறை எவ்வாறு இணைந்து செயல்படு கின்றது என்பதையும் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கி பேசினார்.

கிராம அறிவு மையச் செயல்பாடுகள் மற்றும் தகவல் தொழில் நுட்பங்கள் மற்றும் சமூக ஊடகங்களை எவ்வாறு விவசாயி களின் தேவைக்கேற்றார்போல் தகவல்களை பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க பயன்படுத்தப்படுகின்றது என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

நிகழ்வில் ,அரிமளம் ஒன்றியக்குத் தலைவர் மேகலாமுத்து, வேளாண் அலுவலர் முகமதுரபி, எண்ணெய் ஊராட்சி மன்ற தலைவர் க.நாகராஜ், ஓணாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.முருகேசன் ஆகியோர் கிராம அறிவு மைய செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார்கள்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை பார்வையிட வந்த இலங்கை கேரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அலுவலர்கள்

கேரிட்டாஸ் இலங்கை தேசிய இயக்குநர் லுகி, தேசிய ஒருங்கிணைப்பாளர் நிலானி, பருவகாலமாற்ற தலைமை அலுவலர் வி.ஆர்.ஹரிதாஸ் உள்ளிட்டோர் இந்தப்பட்டறிவு பயணம் மற்றும் பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்கள் நாட்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன உதவியுடன் கிராம அறிவு மையங்களை சிறப்பாக அமைத்து செயல்படுத்துவோம் என்றார்கள்.

விவசாயிகள், ஊராட்சி உறுப்பினர்கள் உழவர் உற்பத்தி யாளர் நிறுவன நிர்வாகிகள் கிராம அறிவு மையத்தில் பயன்பெற்ற பெண்கள் உள்ளிட்ட சுமார் 50 நபர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்வை கள அலுவலர் டி.விமலா, தொழில் நுட்ப அலுவலர் எ.கோபால், கிராம அறிவு மையப் பணியா ளர்கள் கே.லெட்சுமி, வி.மேனகா ஆகியோர் ஒருங்கிணைத் தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top