முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைந்து எடுத்த நடவடிக்கையால் தமிழக அரசானது மறு நாளே கோரிக்கை யை ஏற்று தென்னை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை மறுநாள் விவசாயிகளின் அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதற்கு விவசாயிகள் நன்றி பாராட்டியுள்ளனர்.
கோபி சுற்று வட்டார பகுதி தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காய் பருப்பு கொள்முதல் செய்ததற்கு கிட்ட தட்ட 2 மாதங்கள் ஆகியும் பணம் பட்டுவாட செய்யப்படவில்லை என்றும்,குடோன்( கிடங்கு) பற்றாக்குறையால் கொள்முதல் செய்வதை இடையில் நிறுத்தி விட்டதாக கோபி பகுதி தென்னை விவசாயிகள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யனிடம் கோரிக்கையை மனு அளித்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுஆவண செய்வதாகவும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.
இதனையடுத்துர் விரைந்து எடுத்த நடவடிக்கையால் தமிழக அரசானது மறு நாளே கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை விவசாயிகளின் அவரவர் வங்கி கணக்களில் சென்னையிலிருந்து வரவு வைக்கப்பட்டது.
அத்துடன், நிறுத்தப்பட்டதேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யும் பணியையும் உடனடியாக தொடங்குவதாக சமந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர்.
தென்னை விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோபி சுற்றுவட்டார தென்னை விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்