Close
நவம்பர் 22, 2024 5:31 காலை

வடகிழக்கு பருவமழை நீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்கால் சீரமைக்க வேண்டும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஏரிகளிலும், குளங்களிலும் வடகிழக்கு பருவமழை நீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்கால் சீரமைக்க வேண்டும், தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்து கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து  நேரில் வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை ஆட்சியரிடம்  வலியுறுத்தினர்.

அப்போது ஏரிகளும், குளங்களிலும் வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்கால்கள் சீரமைக்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.

பசும்பால் லிட்டருக்கு ரூபாய் 45 ரூபாய் என்ற கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். ஆவின் மூலம் மாட்டு தீவனம் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.  அரசு விலை 33 ரூபாய் அறிவித்தபடி பால் கொள்முதல் செய்யப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழக ஏரி மற்றும் மாற்றுப் பாசன விவசாய சங்க மாநிலத் தலைவர் பூ. விஸ்வநாதன் உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை கொடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top