Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி..!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக பர்கூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட புதிய ரக கேழ்வரகு

ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை பகுதிகளான தாளவாடி, பர்கூர், கடம் பூர் ஆகிய இடங்களில் வசிக்கும் மலைவாழ் மக் கள் ராகி, பீன்ஸ், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல், சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கேழ்வரகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில், அறிமுகப்படுத்தப்பட்ட ‘அத்தியந்தல்-1′ என்ற புதிய ரக கேழ்வரகு பர்கூர் மலைப்பகுதியில் முதல் முறையாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செயல்முறை விளக்கம் ஈரோடு மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பர்கூர் அருகே கொங்காடை கிராமத்தில் நடந்தது. இதில், உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் சரவணகுமார், பண்ணை மேலாளர் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து தொழில் நுட்ப வல்லுநர் சரவணகுமார் கூறியதாவது, ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்க ளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது உணவுக்காக ராகி பயிரை அதிகமாக சாகுபடி செய்கின்றனர். ஏற்கெனவே அவர்கள் பயிரிட்ட கேழ்வரகு பயிரில் ஒரு ஏக்கருக்கு 900 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது புதிதாக அறிமு கப்படுத்தப்பட்டு உள்ள ‘அத்தியந்தல்-1 என்ற ரகத் தில் ஏக்கருக்கு 1,500 கிலோ மகசூல் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டு ள்ளது.

மேலும் மாவட்டத்தில் முதல் முறையாக பர்கூர் அருகே கொங்காடை கிராமத்தில் 10 ஏக்கரில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிர் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது. பலத்த காற்று வீசும்போது எளிதில் சாய்ந்து விடாது. நோய் எதிர்ப்பு திறன் மிக்கது. எனவே, விவசாயிகளும் ஆர்வமாக இந்த பயிரை சாகுபடி செய்து உள்ளனர். அவர்களுக்கு ஒருங்கிணைந்த சாகுபடி தொழில்நுட்பம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு தொழில்நுட்ப வல்லுநர் சரவணகுமார் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top