Close
நவம்பர் 21, 2024 5:29 மணி

பயிர் பாதிப்புகளை அறிவியல் தொழில்நுட்ப கருவிகள் மூலம் துல்லியமாக கண்டறியும் பயிர் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிர் மருத்துவர் முகாமை புதுதில்லி CABI விஞ்ஞானி கிருத்திகா கண்ணன் பார்வையிட்டார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிர் மருத்துவ முகாமை புதுதில்லி Centre for Agriculture and Bio-Science InternationalCABI  விஞ்ஞானி நேரில் பார்வையிட்டார்.

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த பயிர் மருத்துவ முகாம் புதுக் கோட்டை அருகே திருமலைராய சமுத்திரத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு எம். எஸ். சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் தலைமை வகித்தார்.

ஊராட்சிமன்ற தலைவர் ராணி பெரியசாமி முன்னிலை வகித்தார். புதுதில்லியிலுள்ள விவசாயம் மற்றும் உயிரியல் பராமரிப்பு மைய  (CABI) விஞ்ஞானி கிருத்திகா கண்ணன்  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், ஒடிஷா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பயிர் மருத்துவ முகாமை சிறப்பாக செயல் படுத்தி வருகின்றது.

புதுக்கோட்டை
பயிர் மருத்துவ முகாமில் விவசாயிகளுக்கு  விளக்கமளிக்கும் விஞ்ஞானிகள் கிருத்திகாகண்ணன், ஆர். ராஜ்குமார்.

பயிர் மருத்துவ முகாம் பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடுகளை புதிய அறிவியல் தொழில் நுட்ப கருவிகள் உதவியுடன் துல்லியமாக கண்ட றிந்து, எளிதில் கிடைக்கக்கூடிய, செலவு குறைவான, சூழலுக்கு பாதிப்பு இல்லாத பரிந்துரைகளை வழங்குவதால் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த பயிர் மருத்துவ முகாம் எவ்வாறு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது என்பதை விவசாயிகளிடம் கேட்ட றிந்து இன்னும் சிறப்பாக செயல்படுத்த என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் வந்துள்ளேன்.

விவசாயிகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத மேலாண் மை முறைகளை பயிர் மருத்துவர் இடமிருந்து பெற்று, இடு பொருள்கள் செலவைக் குறைத்து, மகசூலைப் பெருக்கி அதிக வருமானம் பெற பயிர் மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிர் மருத்துவ முகாமில் பேசிய விஞ்ஞானி கிருத்திகா கண்ணன், விஞ்ஞானி  ஆர். ராஜ்குமார்

பின்னர் பயிர் மருத்துவர் முகாம், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை இடு பொருட்கள் உற்பத்தி மையம் மற்றும் விவசாயிகள் தோட்டங்களை பார்வை யிட்டார். மேலும் பயிர் மருத்துவ முகாம் விவசாயிகளுக்கு எவ்வாறு பயனுள்ளதாக உள்ளது என்பதை கலந்துரையாடல் மூலம் விஞ்ஞானி கிருத்திகா கண்ணன் கேட்டறிந்தார்.

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன பயிர் மருத்துவர், பாரதிதாசன் விவசாயிகள் கொண்டு வந்த பாதிக்கப்பட்ட பயிர் மாதிரிகளை ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்கினார். விவசாயிகள் முத்துலட்சுமி, விமலா, கலா, ராதா, ஜெகநாதன் உள்ளிட்ட விவசாயிகள் பயிர் மருத்துவ முகாம் எவ்வாறு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டனர்.
முகாமை, கள அலுவலர் விமலா, தொழில் நுட்ப அலுவலர் வினோத் கண்ணா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top