வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வைகை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. ஒரு வாரத்தினை கடந்தும் அணை நீர் மட்டம் 71 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த பரவலான மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வரை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
கடந்த ஆறு நாட்களாக மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. இதனால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 1150 கனஅடி மட்டும் நீர் வரத்து உள்ளது. வரும் நீர் முழுக்க வெளியேற்றப் பட்டு அணையின் நீர் மட்டம் 71 அடியாக நிலைநிறுத்தப் பட்டுள்ளது.
பெரியாறு அணை நீர் மட்டம் 138.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி நீர் வரத்து உள்ளது. வரும் நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது.