புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் 11 -ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் இயக்குனர் வி.பிச்சை தலைமை வசித்தார். புதுக்கோட்டை வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் ஆர்.ஜெகதீஸ்வரி பொதுக்குழுவை துவக்கி வைத்து பேசுகையில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம், வேளாண்மை உற்பத்தியை பெருக்குவது, மதிப்பு கூட்டுவது நல்ல விலைக்கு விவசாய விலை பொருட்களை விற்பனை செய்வது மேலும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவது. இவைகளை நடைமுறைப்படுத்த நிறுவனத்தின் இயக்குனர்கள் முன் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை வேளாண் வணிகத்துறை வழங்கும் என்றார்.

எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் பேசியதாவது: எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு இயற்கை இடுபொருட்கள் விற்பனை மையம் துவங்குவதற்கும் தேவையான எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் உதவிகளை வழங்கும் விவசாயிகளுக்கு பூச்சி, நோய் மேலாண்மைக்காக பயிர் மருத்துவ முகாம் உள்ளிட்ட விவசாயம் தொடர்பான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அனைத்து விவசாயிகளுக்கும் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை வேளாண்மை வணிகம் மற்றும் விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை நபார்டு உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றார். இந்த வாய்ப்புகளை இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பொதுக்குழுவில் இயக்குனர்கள் எல்.பழனிச்சாமி, கே.சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களை இயக்குனர் சுப்பையா கௌரவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, பேராசிரியர் மற்றும் தலைவர் டான்வாஸ் கால்நடைத்துறை, பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன், விதை சான்று மற்றும் உயிர்ம சான்று உதவி இயக்குனர் எம்.மதியழகன், வேளாண் தொழில் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் பி. எம்.ஜெனிபர் , எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், மாவட்ட வளர்ச்சி மேலாளர் நபார்டு, தீபக்குமார் , மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் அ .ஞானபிரகாசி, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா(சென்னை) விவேகானந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆண்டறிக்கையை இயக்குநர். கே.வித்யா வாசித்தார். தனிக்கை அறிக்கையை ஜெ.கவுரி வாசித்தார். 2024 – 2025 ஆண்டு திட்டத்தை என்.நந்தகுமார் செயல் அலுவலர் வாசித்தார். நிறுவனத்தின் அனுபவ பகிர்வுகளை இயக்குநர்கள் சி.காமாட்சி, ஆர்.ரெங்கசாமி, .ஏ.ஜோதிமணி, எஸ்.மூக்காயி, ஐ.ராயப்பன், பி.சின்னசாமி, எம்.ராஜாமணி, எஸ்.ஜெயலெட்சுமி ஆகியோர் பேசினார்கள்.
நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் இயக்குநர் ஆர்.சுப்பையா வரவேற்றார். நிறைவாக எம்.ராஜமாணிக்கம் இயக்குநர் நன்றி கூறினார்