Close
ஏப்ரல் 4, 2025 12:53 மணி

வேளாண் கல்லூரி மாணவிகள் வேம்பு பொருட்களின் பயன்பாட்டு செயல்விளக்க பயிற்சி..!

வேம்பு பொருட்களின் பயன்பாடு குறித்து விளக்கமளிக்கும் வேளாண் கல்லூரி மாணவி

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கிராமத்தில் மதுரை அரசு வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி தலைமையிலான குழுவினர்கள் கிராமப் புற திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு கரிம வேளாண்மையை மேம்படுத்த வேம்புப் பொருட்களின் பயன்கள் குறித்து பயிற்சியளித்தனர்.

இந்த பயிற்சியில் வேப்ப எண்ணெய், வேப்ப பொடி, வேப்ப மரக்கொட்டை சாரம், வேப்ப இலை சாரம் மற்றும் வேப்பக் கொம்போஸ்ட் போன்ற பொருட்களின் பயன்பாடு, முக்கியத்துவம் மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்தும் இவை கரிம வேளாண்மையை மேம்படுத்துவதில் எவ்வாறு உதவுகின்றன என்பதையும் விவரித்தார்.

இந்தபயிற்சியின் போது விவசாயிகள் கீர்த்தனா தேவியுடன் கலந்துரையாடி தங்களுடைய சந்தேகங்களை தெளிவுபடுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top