Close
ஆகஸ்ட் 24, 2024 4:47 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோள படைப்புழுவைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்ப அறிமுக கருத்தரங்கம்

புதுக்கோட்டை

மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்த அறிமுகப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தை விளக்கி பேசிய இங்கிலாந்தில் செயல்படும் பயிர் நலன் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் தேசிய மேலாளர் ஜெனாரோஸ்

மக்காச்சோள படைப்புழுவைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்ப அறிமுக கருத்தரங்கம் நடைபெற்றது.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்ப அறிமுக கருத்தரங்கம் புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் இராம.சிவக்குமார் தலைமை வகித்து பேசிய தாவது: மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் மிகப்பெரிய சவாலாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச் சோள சாகுபடி பரப்பளவு 6000 ஏக்கரில் இருந்து 1600 ஏக்கராக குறைந்துள்ளது.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் முன்னெடுக்கும் இந்த ஆராய்ச்சிக்கு வேளாண் துறை முழு ஒத்துழைப்பை நல்கும் என்றார். மேலும் படைப்புழுவை கட்டுப்படுத்து வதற்கு வேளாண் துறை மூலம் எடுக்கப்பட்டுவரும் செயல்பாடுகள் குறித்தும்  விளக்கமளித்தார்.

இங்கிலாந்தில் செயல்படும் பயிர் நலன் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் தேசிய மேலாளர் ஜெனாரோஸ் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்த அறிமுகப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தை விளக்கி பேசியதாவது: முதல் முறையாக இந்த ஆய்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி யுடன் இணைந்து இந்த புதிய தொழில் நுட்பம் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கு வேளாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்  பல்கழைக்கழகம் தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகின்றது. இந்த தொழில்நுட்ப மானது மக்காச்சோள படைப்புவைத்தாக்கும் ஆண் பூச்சிகளை கவர்ந்து  இழுக்கக்கூடிய இனக்க வர்ச்சிப் பொறிகளை பயன்படுத்துவது.

புதிதாக பயன்படுத்தும் இனக்கவர்ச்சி பொறிக்கும் தற்பொழுது ஆராச்சியில் ஈடுபடுத்தப்படும் கவர்ச்சி பொறிக்கும் உள்ள வேறுபாடு, இந்த புதிய இனக்கவர்ச்சிப் பொறியில் சென்சார் பொருத்தப் பட்டிருக்கும். தகவல்களை வழங்கக்கூடிய சிம்கார்டு பொருத்தப்பட்டிருக்கும்.

மக்காச்சோளம்
புதுக்கோட்டை வம்பனின் மக்காச்சாளப்பயிரை ஆய்வு செய்த வேளாண் விஞ்ஞானிகள்

இது சூரிய ஒளியில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் பயிர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே புழு தாக்குதலின் நிலையை அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு பாதிப்பை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த முடியும்.  இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடுத்த மக்காச்சோள பருவத்தில் இருந்து இந்த ஆராய்ச்சி புதுக்கோட்டையில் விரிவு படுத்தப்படும் என்றார் அவர்.

நிகழ்ச்சிகளில், கேபி நிறுவன விஞ்ஞானி வினோத் பண்டிட், செய்தி தொடர்பு அலுவலர், கீர்த்திகா, வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் ஆர்.ரமேஷ், வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் டி.செந்தில்குமார்.

இங்கிலாந்து பயிர் நலன் மற்றும் பாதுகாப்பு நிறுவன உதவி திட்ட அலுவலர் லாரா ஒயிட், முன்னோடி விவசாயி வே.சு.காமராசு, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர்.கோபிநாத், செய்தி தொடர்பு அலுவலர் வி.பி.கவிதா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் விவசாயிகள், வேளாண் துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள், இடுபொருள் விற்பனையாளர்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட 150  பேர் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார்  வரவேற்றார். பயிர் மருத்துவர் சி.சுதாகர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top