புதுக்கோட்டை பெரியார்நகரில் இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனி லிட் சார்பில் நபார்டு கிராம அங்காடி திறக்கப்பட்டது.
புதுக்கோட்டை பெரியார்நகரில், இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனி லிட் சார்பில், நபார்டு கிராம அங்காடியினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
(14.04.2022) திறந்து வைத்து, அங்காடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முதல் விற்பனையை துவக்கி வைத்திட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
நபார்டு வங்கி உதவியுடன் செயல்படுகிற இந்த அங்காடியில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய அரிசி வகைகள், பருப்பு எண்ணெய், திண்பண்டங்கள் ஆகிய பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனி நிர்வாக இயக்குனர் ஆதப்பன், இயக்குநர் தனபதி, வேளாண் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.