Close
நவம்பர் 21, 2024 7:37 மணி

உழவர்கடன் அட்டை பெறாதவர்களுக்கு ஊராட்சிகளில் சிறப்பு முகாம் ஏப்.24 -ல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

உழவர் கடன் அட்டை பெற ஊராட்சிகள் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள்  24.04.2022 முதல் 01.05.2022 வரை ஊராட்சிகளில்  நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

இந்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை யால், Kisan Bhagidari Prathmikta Hamari Campaign       உழவர்களு டனான  கூட்டிணைவே நமது முன்னுரிமை என்கின்ற சிறப்பு முகாம் நாடு முழுவதும் வரும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை நடத்தப்படவுள்ளது. இதுவரை உழவர் கடன் அட்டை (KCC) பெறாத விவசாயிகள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

உழவர் கடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர்க் கடனாக ரூ.3 லட்சம் வரையிலும், பால் பண்ணை, கால்நடை பராமரித்தல், மீன் வளர்ப்பு போன்ற வேளாண் உபதொழில் செய்வோர்க்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் பெற முடியும். இத்திட்டத்தின்கீழ் அதிகபட்ச மாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம்.

உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7% வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாகத் தவணை மாறாமல் திரும்பச் செலுத்தினால் 3% வரை வட்டி மானியம் பெறலாம்.  உழவர் கடன் அட்டைத் திட்டத்தின்கீழ் விவசாயிக ளுக்கு ரூ.1.60 இலட்சம் வரை எவ்விதப் பிணைய மும் இன்றிக் கடன் வழங்கப்படும்.

உழவர் கடன் அட்டை மூலம் கடன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள் (பட்டா-சிட்டா, அடங்கல்), ஆதார் அட்டை (கட்டாயம்), பான் அட்டை இவற்றுடன் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்க ளுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கிக் கிளைகளி லும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையி லும், கிரெடிட் ஸ்கோர் போன்ற கடன் அடைப்புத் திறன்,  PMFBY வலைத்தளத்திலுள்ள விவசாயிகளின் விவரம், வங்கி களின் சட்டதிட்டங்கள் ஆகிவற்றிற்கு உட்பட்டும், நிலம், பயிரீட்டு அளவு ஆகியவற்றைப் பொறுத்தும் கடன் வழங்கப் படும்.

விவசாயிகளின் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பத் தினை அதன் இணை ஆவணங்களுடன், நேரடியாக வங்கிக் கிளைகளில் சம்பந்தப்பட்ட வங்கி வணிகத் தொடர்பாளர்கள் (Business Correspondent) மூலமாகவோ, மாவட்ட வேளாண் துறை அலுவலகம், தோட்டக்கலைத் துறை அலுவலகம், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் இவற்றில் ஏதேனும் ஒன்றிலோ சமர்ப்பிக்கலாம்.

இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை  ஊராட்சிகளில்  நடைபெறவுள்ள இச்சிறப்பு முகாமில் உழவர் கடன் அட்டை பெற்றுப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்குப் புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (LDM)  நபார்டு (NABARD) வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்  கவிதாராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top