தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக பிரதம மந்திரியின் விவசாய சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வயல்களில் தொடர்ந்து சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது ஆழ்குழாய் கிணறுகளிலும், திறந்த வெளிகிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே, இருக்கின்ற நீரினைக் கொண்டு, நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்திடவும், சாகுபடி செய்துள்ள பயிர்களிலிருந்து அதிக மகசூலை பெறவும் அனைத்து விவசாயிகளும் சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில், சிறுவிவசாயிகளுக்கு அதிகபட்ச 5 ஏக்கர் பரப்பளவிலும், குறு விவசாயிகளுக்கு 2.50 ஏக்கர் பரப்பளவிலும் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைத்து தர விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த 100 சதவிகித மானியம் தமிழகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதர விவசாயிகளுக்கு அதாவது 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துதரப்படுகிறது. ஓர் பயனாளி குடும்பத் திற்கு அதிகபட்;சமாக 12.5 ஏக்கர் அதாவது 5 எக்டர் வரை சொட்டுநீர் பாசனம் அமைத்துதரப்படுகிறது. இந்த திட்டம் மத்திய, மாநில அரசு நிதியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிலமும், நீர் ஆதாரமும் உள்ள விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்திட அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களான கணினி சிட்டா, நிலத்தின் வரைபடம், ஆதார் கார்டு, ரேசன் கார்டு, அடங்கல், மண் மற்றும் தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கை, நிழற்படம் இரண்டு அளித்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
விவசாயிகள் மேற்கண்ட ஆவணங்களை தங்கள் பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநர் வாயிலாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாக தோட்டக்கலைத்துறை இணையதள முகவரியில் (http//www.tnhorticulture.tn.gov.in/horti/mimis) பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நுண்ணீர் பாசன நிறுவனங் களை விவசாயிகள் தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வசதியும் இணையதளத்தில் உள்ளது.
விவசாயிகள் வயல் அமைப்புமற்றும் மின்மோட்டார் குதிரை திறன், தண்ணீர் வெளியேற்றும் குழாயின் விட்டம் மற்றும் நீர் ஆதார இருப்பிடத்திற்கும் வயல் அமைந்துள்ள இடத்திற்கும் உள்ள தொலைவு ஆகியவற்றை பொறுத்தும், நீர் ஆதாரம் ஆழ்குழாய் கிணறு அல்லது திறந்த வெளி கிணறு என்பதை பொறுத்தும் சொட்டுநீர் பாசனம் அமைப்பு நிறுவ பாசன அமைப்பு பாகங்கள் தேவைப்படுகிறது. இதில் அரசால் அனுமதிக்கப்பட்ட பாகங்களுக்குரிய தொகையை தவிர்த்து இதர இனங்களை விவசாயிகள் தொகை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
சொட்டுநீர் பாசனம் அமைப்பதால் அதிகமகசூல் மற்றும் மேலான உற்பத்திதிறன், சீரான வளர்ச்சி மற்றும் சீரான அறுவடை, மண்ணின் தன்மைக்கேற்ப நேரடியாகப் பயிரின் வேர் பகுதிக்கு நீரை செலுத்துகிறது இதனால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. தாவரத்தின் இலைச்செறிவு வறண்டு காணப்படுவதால் நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கான தாக்குதல் குறைவு. குறைவானகளை வளர்ச்சி, இதனால் வேலையாட்களின் கூலி செலவு குறைவு, எனவே உழவிற்கான செலவும் குறைவு.
மேலும், விவரங்களுக்கு புதுக்கோட்டை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 8122442218இ வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 9751938364 அன்னவாசல் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9786882155 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 9751024594 குன்றாண்டார்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9944082832 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 7339475686 பொன்னமராவதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9578770294 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 6381879509 திருவரங்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9047733669 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 7502872527 அறந்தாங்கி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9688841018 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 9843558007 அரிமளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9600016824வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 9600016824 விராலிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 7904223804 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 7904628879யை தொடர்புகொள்ளலாம்.
மேலும், கறம்பக்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9944213234 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 8883609071 கந்தர்வக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9843917074 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 6381107003 திருமயம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9994659469 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 9787755443 ஆவுடையார்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9688841018 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 9843558007மணமேல்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலைபேசி எண் 9047844543 வட்டார தோட்டக்கலை அலுவலர் அலைபேசி எண் 7867919082 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.