ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 27-ந் தேதி வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட தகவல்:
ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஒவ்வொரு மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று கலெக்டர் தலைமையில் வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் விவசாயிகள் தங்களது பிரச்னைகள் குறித்த மனுக்களை ஆட்சியரிடம் அளித்து வருகின்றனர். அதன்படி மே மாதத்திற்கான வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் 11. 30 மணி வரை விவசாயிகளிடமி ருந்து மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாயப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்னைகளை, கருத்துகளை தெரிவிக்கலாம். 12.30 மணி முதல் 1.30 மணி வரை அதற்கான அலுவலர்களின் விளக்கம் அளிக்கப்படும். எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.