Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

தமிழகத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு கட்ட ரூ. 300 கோடிநிதி ஒதுக்கீடு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் முன்னையம்பட்டி திறந்தவெளிநெல் சேமிப்புகிடங்கினை உணவு துறைஅமைச்சர் அர. சக்கரபாணி பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்

.தமிழகம் முழுவதும் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வருவதை உணர்ந்து அதற்கு நிரந்தரதீர்வுகாண வேண்டும் என்ற நோக்கத்தில் முதற்கட்டமாக, தமிழகத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பதற்காக கவர்டு செமிகுடோன் கட்டுவதற்கு, சுமார் 300 கோடி நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார் என  உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம்,  முன்னையம்பட்டி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கினை உணவுமற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறைஅமைச்சர் அர. சக்கரபாணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ ஆலிவர்  ஆகியோர்   (05.08.2022 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் அர. சக்கரபாணி  தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவுப்படி,  முன்னையம்பட்டி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கு ஆய்வுமேற்கொள்ளப் பட்டது. முதலமைச்சர்  தலைமையில் உணவுத்துறை சம்பந்தமானஆய்வுக் கூட்டம் சென்னையில் அனைத்துதுறை அலுவலர்களுடன் நடைபெற்றது.

அதில், விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த நெல்லில் ஒருநெல்மணி கூட சேதாரம் அடையக்கூடாது என்பதை முதலமைச்சர் வலியுறுத்தினார். தமிழகம் முழுவதும் 103 திறந்தவெளி சேமிப்புகிடங்குகள் செயல்பட்டு வருவதை உணர்ந்து,  அதற்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்ற நோக்கத்தில் முதற்கட்டமாக, தமிழகத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் வகையில் கவர்டு செமிகுடோன் கட்டுவதற்கு, சுமார் 300 கோடிநிதி ஒதுக்கீடு  செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை, பிள்ளையார்பட்டி, செல்லம்பட்டி, திட்டக்குடி ஆகிய மூன்று இடங்களில் சுமார், 58 ஆயிரம் மெட்ரிக்.டன் சேமித்து வைக்கக்கூடிய வகையில் சேமிப்புக்கிடங்கு கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளார்கள்.
முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

டெல்டாமாவட்டங்களில் மழையினால் ஏற்பட்டசேதம் குறித்து மாவட்டநிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களுடன் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மேட்டூர் அணையில், இருந்து திறந்துவிடப் படுகின்ற தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கானொளிகாட்சி மூலம் பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு பேசியபோது நெல் மூட்டைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்..

எல்லா இடங்களிலும் இரவுநேரங்களில் தார்ப்பாய் மூடி பகல நேரங்களில் அதைத் திறந்து உலரவைத்து பாதுகாக்க வேண்டும் உரிய ஆட்களை வைத்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பொதுவாக ஈரப்பதம், 17 சதவீதம் இருக்கலாம்.  டெல்டா மாவட்டத்தில்14.6 சதவீதம் தான் உள்ளது. விவசாயிகளிடமி ருந்து நேரடி கொள்முதல் நிலையங்களை பெறப்படும் நெல்லினை அரவை ஆலைகளுக்குஉடனடியாக அனுப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் எந்ததவறும் நடக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் பிளக்ஸ் போர்டு வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

அதில் மாவட்டஆட்சியர் நுகர்பொருள் வாணிபக்கழக உயர் அலுவர்கள் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுகள் ஏதேனும் நடந்தால், அந்தஎண்னில் தொடர்பு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிமைப் பொருட்கள் வெளிமாநிலத்திற்கு கடத்தப்படாமல் நடவடிக்கை எடுக்கும் வகையில் நுகர் பொருள் வாணிபக் கழகதுறையில் சென்னையிலும் மதுரையிலும் 2 காவல் கண்காணிப்பாளர்கள் இருந்த நிலையில், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூருக்கு கூடுதலாக தலா ஒரு காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் புகார் பெட்டிவைக்கப்பட்டு அதன் சாவி மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. வாரம் ஒரு முறை மாவட்டவருவாய் கோட்டாட்சியர் அல்லது மாவட்டவருவாய் அலுவலர் அந்த புகார் பெட்டியை திறந்து மனுக்களைஎடுத்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நெல்லுக்கு 1960 ரூபாயி லிருந்து, சன்ன ரகத்திற்கு ரூபாய் 100 உயர்த்தப் பட்டுள்ளது கூடுதல் ஆதார விலை 100 ரூபாய் உயர்த்தப்பட் டுள்ளது. மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதிதான் திறக்கப்படுவது வழக்கம்.  இந்தஆண்டு முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்டது.

குறுவை சாகுபடி முன்கூட்டியே தொடங்கப்பட்டதால், நெல் அறுவடை செப்டம்பர் மாதமே வந்துவிடும் என்பதால்,பிரதம மந்திரிக்கு கடிதம் எழுது செப்டம்பர் 1 -ஆம் தேதியே நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆதாரவிலை உயரத்தி தரவேண்டும் என கேட்டிருந்தார். எனவே செப்டம்பர் 1-ஆம் தேதி நெல் கொள்முதல் பணிகள் தொடங்கப்படும்.

இதுகுறித்து சென்னையில் நடந்த  அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, தேவைப்படக்கூடிய தர்பாய்கள், கொள்முதல் செய்யக்கூடிய சாக்கு, சணல் தேவையான அளவு கையிருப்பு இருக்க வேண்டும்.

அதேபோல், விவசாயிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது கூந்தல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் தாமதம் இன்றிநெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டத்திற்கு கூடுதலான திறந்த வெளிநெல் குடோன் தேவையாக உள்ளது  இதுகுறித்து ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சரிடம்  வலியுறுத்தியுள்ளேன். விரைவில் கூடுதலான செமிகுடோன்கள் கட்டப்படும்.

கடந்தஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வந்தாலும்  கொள்முதல் செய்யப்படும். தனியார் பங்களிப்புடன் 12 இடங்களில் நெல் அரவை ஆலைகளை நிறுவுவதற்கு அரசு முடிவெடுத்து 6 ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறைஅமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

இந்தஆய்வின் போதுபோது சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், (திருவையாறு),  டி. கே. ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்),  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மகேஸ்வரி, மாவட்டஊராட்சித் தலைவர்  ஆர் உஷா புண்ணியமூர்த்தி, வருவாய் கோட்டாட் சியர் ரஞ்சித், வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top