Close
நவம்பர் 22, 2024 8:27 காலை

விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் வரும் 31 ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும்

புதுக்கோட்டை

பிரதமரின் கௌரவ நிதித்திட்டத்தில் உதவித்தொகை பெற இ-கேஒய்சி- பதிவை புதுப்பிக்க வேண்டும்

உதவித்தொகை பெரும் விவசாயிகள் 31 -ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து ஊக்கத்தொகை பெற பிஎம் கிசான் வலைத்தளதில் இ-கே.ஓய்.சி செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நேரடி நிலமுள்ள சிறு,குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6000/- பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து,அதிக விளைச்சல் பெற்று பண்ணை வருவாயை உயர்த்திடும் பொருட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற குடும்ப அட்டை உள்ள ஒரு விவசாய குடும்பம் ஒரு அலகாக எடுத்துக் கொள்ளப்படும், ஒரு குடும்ப அட்டையில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும்.
மேலும் 01.02.2019 அன்று வருவாய் கணக்கு சிட்டாவில் நில உரிமை பெற்றுள்ள நபர்களே இத்திட்டத்தில் பயன் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
01.02.2019க்கு பிறகு புதியதாக நில உரிமை பெறும் நிலங்க ளின் உரிமையாளர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிதி உதவி பெற தகுதியற்றவர்கள் ஆவர். 01.02.2019 அன்றைய தேதியில் நில உரிமையாளர் இறந்துவிடும் பட்சத்தில் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொண்டால் வாரிசு தாரர் இத்திட்டத்தில் பயன் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,28,995 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஊக்கத் தொகையானது ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்படும். எனவே தொடர்ந்து ஊக்கத்தொகையினை பெற்றிட விவசாயிகள் தங்களின் ஆதார் விவரத்தினை சரிப்பார்த்து இ-கே.ஓய்.சி      (e-KYC) செய்து பதிவை வருகிற 31 -ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.

இதனை www.pmkisan.gov.in என்ற வலைத்தளத்தில் சென்று ஆதார் எண் மற்றும் ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்னை இ-கே.ஓய்.சி யில் உள்ளீடு செய்து ஆதார் விவரத்தினை உறுதி செய்யலாம். இவ்வாறு புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்நு ஊக்கத்தொகை பெற முடியும். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இம்மாதம் 31 -ஆம் தேதிக்கு இ-கே.ஓய்.சி யில் பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டுமென வேளாண் இணை இயக்குநர்(பொ) அறிவுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top