Close
செப்டம்பர் 20, 2024 5:49 காலை

பெருங்குடி அம்பாள் மழலையர் பள்ளியில் இலவச சிலம்பு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை

பெருங்குடி அம்பாள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சிலம்பபயிற்சி பெற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை அருகேயுள்ள பெருங்குடி ஸ்ரீ அம்பாள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 26 .12. 2022 முதல் 31. 12 .2022 வரை இலவச சிலம்பு பயிற்சி முகாம்  பள்ளித் தாளாளர் சக்தி கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

சிலம்பு பயிற்சி நிறைவு நாளில் அழ.முத்தழகு பட்டர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் மாஸ்டர் சேது கார்த்திகேயன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முனசந்தை ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி மெய்யப்பன், மாஸ்டர் ஹரிஹரன், மாஸ்டர் பரத் சஞ்சய் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் 70 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top