Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

தஞ்சையில் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் கலைப்போட்டிகள் அறிவிப்பு

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் கலைப்போட்டிகள் நடத்தப் படுகிறது

தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயதுமுதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வாரவிடுமுறை நாட்களான சனிக்கிழமை காலை 9  மணி முதல் 12 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9  மணிமுதல் நண்பகல் 12 மணி வரை குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளி (அரண்மனைவளாகம்)யில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதிற்குள்பட்ட  மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வுவை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப் புறக் கலை) குரலிசை,ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திடவும், இக்கலைப் போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டிகளின் விதிமுறைகள்:

பரதநாட்டியம் (செவ்வியல் கலை) : பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்றந டனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரியஉடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்படநடனங்கள் நீங்கலாக) மேற்கத்தியநடனங்கள் மற்றும் குழு நடனங்க ளுக்கு அனுமதியில்லை.

பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன் படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர் களே ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட  அனுமதிக்கப்படும்.

கிராமியநடனம் (நாட்டுப்புறக் கலை): தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனைம ற்றும் உரியஉடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள்  நீங்கலாக) மற்றும் குழு நடனங்கள் அனுமதி யில்லை. பக்கவாத்தி யங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும்.

குரலிசைப் போட்டி:  கர்நாடக இசை,தேசியப் பாடல்கள்,சமூக விழிப்புணர்ச்சிப் பாடல்கள்,நாட்டுப் புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடவேண்டும். பக்கவாத்தியக் கருவிகளை, பாடுபவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கத்திய இசை, திரையிசைப் பாடல்கள், குழுப்பாடல்கள் அனுமதியில்லை. அதிகபட்சம்; 5 நிமிடங்கள் பாடலாம். ஒலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது.

ஓவியப் போட்டி: 40×30செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சீல், கிரேயான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயிண்டிங் என எவ்வகை யிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள் வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும்.

குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். இப்போட்டி களில் வெற்றி பெரும் மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்கின்றவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப் படிப்புச் சான்றிதழ்களுடன், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் (அரண்மனை வளாகத்தில் இயங்கிவரும்) அரசர் மேல்நிலைப் பள்ளிக்கு 26.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு வருகை தருமாறு தஞ்சாவூர் மாவட்டஆட்சி/ர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top