Close
நவம்பர் 22, 2024 1:08 மணி

புதுக்கோட்டையில் உலக புவி நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை

உலக புவி தினத்தையொட்டி பெருமாநாடு வைரம்ஸ் பப்ளிக் ஸ்கூஸ் சார்பில நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச புவி தினத்தையொட்டி சுற்றுச்சூழலின் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் ‘இன்வெஸ்ட் இன் அவர் ப்ளானட்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி  புதுக்கோட்டை பெருமாநாடு  வைரம்ஸ் பப்ளிக் பள்ளி சார்பாக நடைபெற்றது.

சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் இருந்து பள்ளி செயலர்  தேவி சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் பிரீஸ் பாப்பச்சன் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தனர்.

மாணவ மாணவியர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் விழிப்புணர்வு வாசகங்களை எழுதிய பதாகையை ஏந்தியபடி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வரை  பேரணியாகச் சென்றனர்.  அங்கு பொதுமக்கள்  சர்வதேச புவி தின விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை நகராட்சி தலைவ  திலகவதிசெந்தில் பங்கேற்று, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளை  வழங்கினார். முன்னதாக,  நகராட்சி  தலைவர்  முன்னிலையில்  ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல் பெருமாநாட்டில் உள்ள வைரம்ஸ் பப்ளிக் பள்ளிவளாகத்திலும் மரக்கன்றுகள் நட்டனர்.’இன்வெஸ்ட் இன் அவர் ப்ளானட்’ அதாவது நாம் வாழும் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள் என்பது இந்த ஆண்டின் புவி  நாள் தீர்மானமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top