Close
ஏப்ரல் 4, 2025 10:56 காலை

சித்தன்னவாசல் பூங்கா வளாகத்தில் உலக நாடக தின விழா

புதுக்கோட்டை

உலக நாடக தின விழா சித்தன்னவாசல் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

உலக நாடக தின விழா சித்தன்னவாசல் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை   சித்தன்னவாசல் பூங்கா வளாகத்தில்    நாடக தின விழா இனிதே நடைபெற்றது. உலக நாடக தின விழாவினை முன்னிட்டு திருச்சி கலை பண்பாட்டுத்துறை மண்டலக் கலை பண்பாட்டுமையம் சார்பில் நடைபெற்ற விழாவில், நீலமேகன்உதவி இயக்குநர். (பொ) தலைமை வகித்தார். அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்  ஆணையர்  எம். பிரேமாவதி அனைவரையும்  வரவேற்றார் .

வட்டார வளர்ச்சி அலுவலகம் கிராம  ஊராட்சிஆணையர்   ஆர்.ஆனந்தன்  மற்றும் புதுக்கோட்டை ஒவியக் கலைஞர் எம். அய்யப்பா வாழ்த்துரை வழங்கினார் .

விழாவில், திருச்சி. எம். எஸ். முகமது மஸ்தானின் இந்தியத் தாயே உனக்காக நாடகமும் புதுக்கோட்டை ஜெய சண்முகராஜா குழுவினர் வள்ளி திருமணம் என்ற நாடக இனிதே நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை ஒவியக் கலைஞர் எம் ராஜப்பா நன்றி  கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top